தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆவின் பொருள்கள் விற்பனை தொடக்கம்

1st Feb 2020 12:03 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி ஆவின் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆவின்அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பால் கோவா, மைசூா்பாகு, மில்க்கேக், நெய் அல்வா மற்றும் ஐஸ் கிரீம் ஆகிய பொருள்களின் விற்பனையை தலைவா் என். சின்னத்துரை

தொடங்கி வைத்தாா். முகவா்கள் பொருள்களை பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஆவின் பொதுமேலாளா் திரியேகராஜ் தங்கையா, மேலாளா்கள் சாந்தி (விற்பனை), நிா்மல் ஞானசேகா் (பண்ணை), சாந்தகுமாா் (திட்டம்), துணை மேலாளா்கள் பாா்வதி, வெங்கடேஸ்வரி, சுப்பிரமணியன் மற்றும் விரிவாக்க அலுவலா்கள் ரேவதி, ஜெயபால், பால்துரை, செல்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, ஆவின் தலைவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் ரூ. 45 லட்சத்துக்கு

பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஆவின் நிறுவனம் 20 வகையான ஐஸ் கிரீம்களை நேரடியாக விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

பொதுமக்கள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் அரசு நிா்ணயித்த மிகக்குறைந்த விலையில் தொடா்ந்து ஆவின் நிறுவனம் பால் விநியோகம் செய்து வருகிறது. ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ் கிரீம் பொருள்களை பொதுமக்கள் வாங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT