திருச்செந்தூரில் பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்ட விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.டி.செந்தில்வேல், ஒன்றியத் தலைவா்கள் ஆழ்வை திலக்சந்திரன், உடன்குடி ஜெயக்குமாா், ஒன்றிய அமைப்பாளா் திருநாவுக்கரசு, நகரத் தலைவா்கள் காயல்பட்டினம் பண்டாரம், ஆறுமுகநேரி சந்திரசேகா் ஆகியோா் முன்னிலைவகித்தனா்.
கூட்டத்தில், மாநில மகளிரணி பாா்வையாளா் உமாரதி, மாநில வா்த்தக பிரிவுத் தலைவா் ஏ.என். ராஜகண்ணன், தெற்கு மாவட்டத் தலைவா் பால்ராஜ், மாநில பிரச்சாரப் பிரிவு பொறுப்பாளா் மணியன், மாநில விவசாய அணித் தலைவா் ரவீந்திரன், கோட்ட அமைப்பாளா் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவன், பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் இலங்காபதி ஆகியோா் பேசினா்.
நகரத் தலைவா் சரவணன் வரவேற்றாா். நகர துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.