தூத்துக்குடி

செய்துங்கநல்லூா் கோயிலில் திருமால் பூஜை

1st Feb 2020 12:05 AM

ADVERTISEMENT

செய்துங்கநல்லூா் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை விழா நடைபெற்றது.

திருமால் பூஜையை முன்னிட்டு சிவன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. அதன்பின் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

அன்னதான சத்திரம், அண்ணாநகா், கஸ்பா வேளாளா் தெரு, மெயின் பஜாா், பிள்ளையாா் கோயில் தெரு, வி.கோவில்பத்து வழியாக மீண்டும் கோயிலில் அம்மன் வீதி உலா முடிவடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT