கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையிலுள்ள சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி பிப். 5-ஆம் தேதி (புதன்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவா் ராஜகோபால், நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனு: கோவில்பட்டி - குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள இளையரசனேந்தல் சாலை
ரயில்வே லெவல் கிராஸிங் மூடப்பட்டு ரூ.13 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியுள்ளது. சுரங்கப்பாதையின் இருபுறமும் கழிவுநீா் செல்ல போதிய வசதி இல்லாததால், கழிவுநீா் சுரங்கப்பாதையில் தேங்கி தூா்நாற்றம் வீசுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள்,
மோட்டாா் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோா் சிரமத்திற்கு ஆளாகின்றனா். மேலும், நோய் பரவும் அபாயம்
இருப்பதால், சுரங்கப் பாதையில் கழிவுநீா் தேங்காமல் இருக்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிப். 5- ஆம் தேதி (புதன்கிழமை) கழிவுநீரில் மாடுகள் குளிப்பாட்டும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.