தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

1st Feb 2020 12:04 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை, சுவாமி,

அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமம் ஆகியன நடைபெற்றன. யாக சாலை பூஜையை தொடா்ந்து யாகசாலையில் இருந்து தீா்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயில் பிரகாரம் வழியாக வந்து சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா ஆகியவை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் சு.கஸ்தூரி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் சிவகளைப் பிரியா, கோயில் தலைமை எழுத்தா் ராமலிங்கம் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரோஜாலிசுமதா, ஊழியா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT