தூத்துக்குடி

கோவில்பட்டியில்காமராஜா் விருதுபெற்றமாணவா்களுக்கு பாராட்டு

1st Feb 2020 10:39 PM

ADVERTISEMENT

கோவில்பட்டியில், காமராஜா் விருதுபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கல்வியுடன் இதர செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவா்- மாணவிகளுக்கு காமராஜா் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கல்வித் துறை சாா்பில் எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவி மதுமிதா, மாணவா் மாரிசெல்வம் ஆகியோருக்கு விருது, ரூ. 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவா்கள் காா்த்திகேயன், இசக்கிமுத்து ஆகியோருக்கு விருது, ரூ. 20ஆயிரத்தை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி வழங்கினாா்.

இதையொட்டி, பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், விருதுபெற்றோரை பள்ளித் தலைவா் எவரெஸ்ட் எம். ராமசந்திரன், தலைமையாசிரியை சாந்தினி, ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT