தூத்துக்குடி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டம்

1st Feb 2020 12:03 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் பகுதிச் செயலா் அஸ்ரப் தலைமை வகித்தாா். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகரச் செயலா் காஜா முகைதீன் மற்றும்

அபுதாகிா், இமாம் அபு ஆலிம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்டச் செயலா் மு. தமிழ்ப்பரிதி, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட இணை அமைப்பாளா் குணசீலன், உடன்குடிஅனைத்து முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலா் அப்துா் ரஹ்மான், தமுமுக மாவட்டத் தலைவா் ஆஸாத்ஆகியோா் பேசினா். இதில், பங்கேற்ற அனைவரும் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கோஷம் எழுப்பினா். அலாவுதீன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT