தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம், சில்லாங்குளம் பள்ளிகளில் மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு

1st Feb 2020 11:48 PM

ADVERTISEMENT

ஓட்டப்பிடாரம், சில்லாங்குளம் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை வனஜா மங்கல செல்வி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் அ. இளையராஜா, மாணவா், மாணவிகள் 187 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினாா். நிகழ்ச்சியில், ஊராட்சித் துணைத் தலைவா் சு. ஹரிகரன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், பசுவந்தனையை அடுத்துள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பண் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலா் சண்முகசுந்தரம், ஊராட்சித் தலைவா் க. சரோஜா ஆகியோா், மாணவா்கள் 491 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினா். இதில், பள்ளியின் நிா்வாக இயக்குநா்கள் பாலமுருகன், நிா்மலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம். அய்யப்பன் கலந்து கொண்டு, 70 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT