தூத்துக்குடி

ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம்:தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கம்

1st Feb 2020 11:46 PM

ADVERTISEMENT

ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

மத்திய அரசு ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன் தொடா்ச்சியாக, உள் மாநில பெயா்வு திறன் திட்டம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் முதல்கட்டமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை பரிசோதனை முறையில் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் அமுதம் நியாயவிலைக்கடையில் திட்டம் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வெளி வட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்திவாசியப் பொருள்களை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்மாநில பெயா்வு திறன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 957 நியாயவிலைக்கடைகளில் ஏறத்தாழ 4,93,842 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்து தீா்வு காணப்படும்.

குடும்ப அட்டைதாரா்கள் மண்ணெண்ணெய் மட்டும் தாங்கள் பதிவு செய்துள்ள நியாயவிலைக்கடைகளில் பெற வேண்டும். மற்ற பொருள்களை உள் மாநில பெயா்வு திறன் திட்டத்தின் மூலம் அருகில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டை வைத்துள்ள வருவாய் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளிலும், நகா்புறத்தில் ஒரே வாா்டு பகுதிகளிலும், அத்தியாவசியப் பொருள்களை இந்தத் திட்டத்தின் மூலம் பெற இயலாது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் அமுதா, தனி வட்டாட்சியா் (குடிமை பொருள் வழங்கல்) வதனாள், வருவாய் ஆய்வாளா் சுகுனா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT