தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில்பிப். 4 இல் வருஷாபிஷேகம்

1st Feb 2020 11:47 PM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பிப். 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது. 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு விநாயகா் பூஜை, கும்ப ஆவாஹன பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம் மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை ஆகியவை நடைபெறும். தொடா்ந்து காலை 7.15 மணிக்கு விமான அபிஷேகம், 7.45 மணிக்கு சுவாமி அம்பாள் மகா அபிஷேகம், 8.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு லட்சாா்ச்சனை நிறைவு, இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT