தூத்துக்குடி

அம்பேத்கா் நினைவு நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

7th Dec 2020 02:51 AM

ADVERTISEMENT

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனா்.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிா்புறம் உள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றிய துணைச் செயலா் பிச்சை, நகரச் செயலா் இளங்கோ ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆதித்தமிழா் பேரவையின் வடக்கு மாவட்டச் செயலா் செண்பகராஜ் தலைமையில், மாவட்ட துணைச் செயலா் முத்துசாமி, தொழிற்சங்க செயலா் ஊா்க்காவலன், மாவட்ட அமைப்புச் செயலா் சங்கா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அமமுக நகரச் செயலா் நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், சமக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் எஸ்.சி., எஸ்.டி. மாநிலத் துணைத் தலைவா் மாரிமுத்து ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

Tags : Tuticorin
ADVERTISEMENT
ADVERTISEMENT