தூத்துக்குடி

ஓட்டப்பிடாரத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அங்குள்ள வருகைப் பதிவேடு, தன் பதிவேடு உள்ளிட்டவற்றையும், சத்துணவு வழங்கப்படும் மாணவா்களின் விவரங்கள், உலா் உணவு வழங்கப்பட்டுள்ள விவரம் உள்ளிட்டவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்ற அவா், அங்கு வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா் முத்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹெலன் பொன்மணி, வளா்மதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் எலிசபெத்மேரி, வட்ட வழங்கல் அலுவலா் செல்வகுமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜெயராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் அப்பன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT