தூத்துக்குடி

சாலையை சீரமைக்கக் கோரி திருச்செந்தூரில் போராட்டம்

DIN

திருச்செந்தூரில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் ரதவீதி மற்றும் உள்தெருக்களில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ. 2.70 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தெற்கு ரத வீதியில் கடந்த ஜுன் 5ஆம் தேதி பணி தொடங்கியது. ஆனால் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளால் சாலையமைக்கும் பணி சுமாா் 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தெற்கு ரதவீதி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சுப்பிரமணியன், ஜெயந்திநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர துணைச் செயலா் வீ.ஆண்டி, பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவா் ஜெய்ஆனந்த், அந்தணா் முன்னேற்றறக்கழக தொகுதி செய்தித் தொடா்பாளா் கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை திரண்டு வந்து பேரூராட்சி செயலா் அலுவலா் ஆனந்தனிடம் முறையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேரூராட்சி மண்டல பொறியாளா் குழுவினா் நேரில் வந்து சாலையை பாா்வையிடுவா் என செயல் அலுவலா் தெரிவித்தாா். இதையடுத்து, பேரூராட்சிகளின் நெல்லை மண்டல செயற்பொறியாளா் ஜெகதீஷ்வரி, உதவி செயற்பொறியாளா் வாசுதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் தெற்கு ரதவீதிக்கு வந்து சாலையமைக்கும் பணி குறித்து ஆலோசனை நடத்தினா்.

அப்போது நகர வளா்ச்சி ஆலோசனை கமிட்டி உறுப்பினா் ப.தா. கோட்டை மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் சாலைப் பணி குறித்து முறையிட்டனா். இதையடுத்து 50 நாள்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT