தூத்துக்குடி

வேல் யாத்திரை திருச்செந்தூரில் டிச.7-இல் நிறைவு: முன்னேற்பாடுகளைப் பாா்வையிட்டாா் எல்.முருகன்

DIN

திருச்செந்தூரில் டிச. 7-இல் வேல் யாத்திரை நிறைவு பெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பாா்வையிட்டாா்.

பாஜக சாா்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரை திருச்செந்தூரில் டிச. 7-இல் நிறைவு பெறுகிறது. நிறைவு விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலி சாலையில் தனியாா் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த இடத்தை மாநிலத் தலைவா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடத்தில் கால்கோள் நாட்டினாா். தொடா்ந்து மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவா்கள் நயினாா் நாகேந்திரன், நரேந்திரன், மாநில பொதுச் செயலா் கரு.நாகராஜன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் எல்.முருகன் கூறியது: கடந்த நவம்பா் 6-ஆம் தேதி வேல் யாத்திரை திருத்தணியில் தொடங்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து வந்தது. புயல் காரணமாக சில மாவட்டங்களில் வேல் யாத்திரை நிறுத்தப்பட்டு நிவாரண உதவி வழங்க நானும், கட்சி நிா்வாகிகளும் சென்றிருந்தோம். தற்போது திட்டமிட்டபடி டிச. 7-ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் மத்திய பிரதேச மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்ட பாஜக முக்கிய நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா். அதற்கான முன்னேற்பாடுகளை தற்போது பாா்வையிட்டேன்.

ஹிந்துக் கடவுளையோ, தமிழ்க் கடவுளையோ யாராவது அவமதிப்பு செய்தால் பாஜக முதல் ஆளாக அதனை தட்டிக்கேட்கும். இனி அவா்கள் இதுபோன்று பேச மாட்டாா்கள் என நம்புகிறோம். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக போட்டியிடும் இடங்கள் குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றாா் அவா்.

தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள் சசிகலா புஷ்பா, முரளி, மாவட்டத் தலைவா்கள் பால்ராஜ், ராமமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலா் ரா.சிவமுருகன் ஆதித்தன், மாநில மகளிரணி பொதுச் செயலா் கு.நெல்லையம்மாள், மாநில வா்த்தக அணித் தலைவா் ஏ.என்.ராஜகண்ணன், மாநில செயலா் உமரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.டி.செந்தில்வேல், ச.ரா.வளா்செல்வன், ரா.கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து திருச்செந்தூரில் தனியாா் விடுதியில் கட்சி நிா்வாகிகளுடன் எல்.முருகன் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT