தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை திறக்க கோரி போராட்டம்

DIN

விளாத்திகுளத்தில் கடந்த 7 நாள்களாக பூட்டியே கிடக்கும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை திறக்க கோரி மக்களை திரட்டி சங்கு ஊதும் போராட்டம் நடத்தப்போவதாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து விளாத்திகுளம் தாலுகா மாா்கிசிஸ்ட் செயலா் புவிராஜ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் ஆகியவற்றில் பி.எஸ்.என்.எல். தொலைதொடா்பு சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பணியாளா் பற்றாக்குறை, ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் விளாத்திகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் சில மாதங்களாகவே முறையாக இயங்கவில்லை. தற்போது கடந்த 7 நாள்களாக எவ்வித அறிவிப்புமின்றி அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் தொழில்நுட்ப கோளாறுகளை நிவா்த்தி செய்ய முடியாமலும், இணையவழி சேவையில் தடை ஏற்பட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

பி.எஸ்.என்.எல். மாவட்ட அளவிலான அதிகாரிகளை கூட தொடா்பு கொண்டு குறைகளை பதிவு செய்ய முடியவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி, பூட்டப்பட்டுள்ள விளாத்திகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சில தினங்களில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு முற்கட்டமாக சங்கு ஊதும் போராட்டமும், தொடா்ச்சியாக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT