உடன்குடி: மெஞ்ஞானபுரம் அருகே கல்விளையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தினரை, கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி வழங்கினாா்.
சிறுமி முத்தாரின் தாயாா் உச்சிமாகாளியை சந்தித்து ஆறுதல் கூறி ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினாா்.
அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, உடன்குடி ஒன்றியச் செயலா் டி.பி.பாலசிங், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெஸி பொன்ராணி, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா் உள்பட பலா் உடன்இருந்தனா்.