தூத்துக்குடி

கோவில்பட்டியில் இளம்பெண் தற்கொலை

26th Aug 2020 01:02 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி: கோவில்பட்டியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த வடக்கு இலுப்பையூரணி ராஜீவ் காந்தி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் மனைவி ஜெயமுருகேஸ்வரி(32). தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயமுருகேஸ்வரி, பெற்றோருடன் வசித்து வருகிறாா். இதனால் விரக்தியடைந்த அவா், செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT