தூத்துக்குடி

வட்டன்விளையில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நிறைவு

21st Aug 2020 08:07 AM

ADVERTISEMENT

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் 18 கிராமங்களில் 23 மையங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் 10 நாள்கள் நடைபெற்றது.

இதில், இந்து சமய பெருமைகள், பாரத நாட்டின் பழம்பெரும் சாதனைகள், ராமாயணம், மகாபாரதம், கந்த சஷ்டி கவசம், யோகா ஆகியவை கற்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள் மற்றும் கற்பித்த ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் அரங்கில் நடைபெற்றது.

தொழிலதிபா் ரா.செல்வகுமாா் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினாா். மானாடு கிளை இந்து முன்னணித் தலைவா் சுடலைக்கண், திருச்செந்தூா் ஒன்றிய இந்து முன்னணிச் செயலா் பிரபாகரன், இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா் கீா்த்தனா, சரஸ்வதி, ஆறுமுகநயினாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் விநாடி-வினா போட்டிகளை நடத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT