தூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரா் ஓண்டிவீரன் நினைவு தினம்

21st Aug 2020 08:09 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு அமமுக மற்றும் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி நகர அமமுக அலுவலகம முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஜெய்சங்கா் (கோவில்பட்டி), மகேந்திரன் (கயத்தாறு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக செயலா் சிவபெருமாள் ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் சாா்பில் தருமத்துப்பட்டி, லிங்கம்பட்டியில் ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாவட்ட அமைப்புச் செயலா் செந்திலரசு தலைமையில், அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT