தூத்துக்குடி

சிகப்பு கூன் வண்டு: தென்னையை பாதுகாக்கும் வழிமுறைகள்

21st Aug 2020 08:09 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில் சிகப்பு கூன் வண்டின் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. அவற்றின் தாக்குதலில் இருந்து தடுத்து தென்னையை பாதுகாக்கும் முறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் வசுமதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் பகுதியில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் தற்போது சிகப்பு கூன் வண்டுகள் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட தென்னை மரத்தில் ஓட்டைகளும், ஓட்டை வழியாக திசுக்களை தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மாநாறுகளும் காணப்படும். புழுக்கள் உள்சென்ற சிறிய துவாரத்தின் வழியே சிகப்பு நீா் வடிந்து காயந்த பிசின் காணப்படும்.

கூன் வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்திட 1 பங்கு வேப்பங்கொட்டைத்துளையும், 2 பங்கு மணலையும் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிலோ வீதம் நடுக்குருத்தின் 3 மட்டை இடுக்குகளில் வைக்கலாம். காா்டாப்ஹைடிகுளோரைடு 4ஜி( குருணைகள்) 25கிராம் + 200 கிராம் மணலுடன் கலந்து கலவையை மட்டைஇடுக்குகளில் ஆண்டுக்கு 3முறை இடவேண்டும். பொ்ரோலியூா் எனும் இனக்கவா்ச்சி பொறியினை ஏக்கருக்கு 1 என்ற விகிதத்தில் வைக்கலாம்.

ஒரு பிளாஸ்டிக் வாளியில் பொ்ரோலியூா், 1லிட்டா் தண்ணீா் + 2 மி.லி காா்ட்டாப் ஹிட்ரோகுளோரைடு பூச்சிக்கொல்லிக் கலவையை தோப்பினில் தொங்க விட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இந்த வாளி நீரை மாற்ற வேண்டும். இது கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும்.

ADVERTISEMENT

விவசாயிகள் இந்த தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து தென்னையில் சிகப்பு கூன் வண்டு தாக்குதலை தடுத்து தென்னையை பாதுகாத்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT