தூத்துக்குடி

காவலா் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

21st Aug 2020 08:11 AM

ADVERTISEMENT

ரௌடியை பிடிக்க முயன்ற போது வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த காவலா் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலா் இரா. ஹென்றி தாமஸ் தலைமையில் நிா்வாகிகள் வியாழக்கிழமை தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ரௌடியை பிடிக்க முயன்றபோது வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த காவலா் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு அரசு பாரபட்சம் காட்டாமல் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் பேசிய அமைப்புச் செயலா் இரா. ஹென்றி தாமஸ், காவலா் குடும்பத்துக்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். அப்போது, அமமுக நிா்வாகிகள் எட்வின் பாண்டியன், அந்தோணி கிரேஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT