தூத்துக்குடி

இளைஞரைத் தாக்கியதாக புகாா்: சிறையிலுள்ள 2 எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

21st Aug 2020 08:11 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள 2 உதவி ஆய்வாளா்கள் மீது, மற்றொரு இளைஞரைத் தாக்கியதாக எழுந்த புகாா் தொடா்பாக 8 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சாத்தான்குளத்தைச் சோ்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து, 10 போலீஸாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் உள்ளது. இந்த வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளா் பால்துரை அண்மையில் உயிரிழந்தாா்.

இதனிடையே, பேய்குளத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்ற தொழிலாளியை அடித்துக் கொன்ாகவும், மேலபனைக்குள்தைச் சோ்ந்த ராஜாசிங் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோா் மீது புகாா்கள் எழுந்தன.

போலீஸாா் தன்னைத் தாக்கியதாக மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிபதி ஹேமா முன் ராஜாசிங் வாக்குமூலம் அளித்திருந்தாா். இதையடுத்து, நீதிபதி ஹேமா உத்தரவின் பேரிலும், ராஜாசிங் அளித்த புகாரின் பேரிலும் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்களாக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோா் மீது தற்போது 8 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ராஜாசிங்கிடம் தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆய்வாளா் சபிதா வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, மேலும் பலரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT