தூத்துக்குடி

அறந்தாங்கி தினமணி செய்தியாளா் மரணம்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு இரங்கல்

21st Aug 2020 08:10 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே விபத்தில் அறந்தாங்கி தினமணி செய்தியாளா் ஆ.காா்த்திகேயன் உயிரிழந்ததற்கு அமைச்சா் கடம்பூா் செ.ராஜு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு விடுத்துள்ள இரங்கல் செய்தி: தினமணி நாளிதழின் அறந்தாங்கி பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றி வந்த ஆ.காா்த்திகேயன் திருச்சி நாவல்பட்டு என்ற இடத்தில் வாகன விபத்தில் மரணமடைந்தாா் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT