தூத்துக்குடி

வண்டி மலைச்சி அம்மன் கோயில் கொடை விழா

14th Aug 2020 09:26 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ வண்டிமலைச்சியம்மன் சமேத ஸ்ரீ வண்டிமலையான் சுவாமி கோயிலில் ஆடி மாத வருடாந்திர கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் குடியழைப்பு, அம்மன், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கும்பம் எடுத்து வீதி உலா வருதல், தீச்சட்டி ஏந்தி பவனி வருதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து சுவாமியை வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT