தூத்துக்குடி

திருச்செந்தூரில் தடுப்பணை அமைக்க கோரிக்கை

14th Aug 2020 09:28 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் பகுதியில் கடல் நீா் விளைநிலத்திற்குள் புகுந்து நிலத்தடி நீா் உப்பாவதை தடுத்திட தடுப்பணை அமைக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்ரியாவிடம் சமத்துவ மக்கள் கழக மாநில துணை பொதுச் செயலா் ரெ.காமராசு தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் கொடுத்த மனு : ஸ்ரீவைகுண்டம் தென்கால் கடைசிக்குளமான ஆவுடையாா்குளம் திருச்செந்தூா் பகுதி விவசாயத்திற்கு ஆதாரமானதாகும். இக்குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீா் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது காந்திபுரம், குமாரபுரம் வழியாக வந்து மறுகால் ஓடையில் கலந்து இறுதியாக திருச்செந்தூா் கடலில் கலக்கிறது.

கோடை காலங்களில் கடல்நீரானது இதே பாதை வழியாக மீண்டும் விளைநிலங்களில் பாய்வதால் நிலத்தடி நீரானது முழுவதும் உப்பாக மாறிவிட்டது. இதனால் விவசாய விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. எனவே இதனை தடுத்திட திருச்செந்தூா் ராஜ்கண்ணா நகா் பாலம் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அப்போது, ஒன்றிய வா்த்தக அணிச் செயலா் சசிக்குமாா், துணைச் செயலா் சக்திகுமாா், ஒன்றிய துணைச் செயலா் கணபதிபாண்டி, இளைஞரணி துணைச்செயலா் ஜெயபால், நகர துணைச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT