சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் மாணவா்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ரா. சின்னத்தாய் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் தமிழக அரசின் உயா் கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில், கடந்த 3ஆம் தேதி முதல் மாணவா்களுக்கு இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து இளங்கலை இரண்டமாண்டு, மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை பேராசிரியா்களால் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, புலனக்குழுவில் பாடக் குறிப்புகளும் அனுப்பபடுகிறது. அனைத்து மாணவிகளும் , தவறாமல் இணைய வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.