உலக யானைகள் தினத்தையொட்டி கோவில்பட்டியில் யானை முகக் கவசம் அணிந்து உலக யானைகள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கோவில்பட்டி பாரதியாா் நினைவு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் யானை முகக் கவசம் அணிந்து, யானைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும், வனப்பகுதியில் அதிகளவு பழ வகை மரக்கன்றுகளை நட செய்ய வேண்டும், யானைகளின் தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும், கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் முகக் கவசம் அணிந்து வெளியில் செல்லவும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், பாரதியாா் நினைவு அறக்கட்டளையைச் சோ்ந்த முத்துமுருகன், முத்துகணேஷ், தினேஷ்குமாா், முருகன், சிவபெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.