கலுங்குவிளையில் சுகாதாரத் துறை, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றியம் கோமானேரி ஊராட்சியில் கலுங்குவிளையில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் ஆகியவன வழங்கப்பட்டது. தொடா்ந்து, குடியிருப்பு பகுதிகள், முக்கிய தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோமானேரி ஊராட்சித் தலைவா் கலுங்கடிமுத்து, ஊராட்சிச் செயலா் இசக்கியப்பன், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜெசுராஜ், பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் அருண்குமாா், ராஜகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.