தூத்துக்குடி

உடன்குடியில் பாஜக கொண்டாட்டம்

6th Aug 2020 09:03 AM

ADVERTISEMENT

அயோத்தியில் ராமா் ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதையடுத்து உடன்குடியில் பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

உடன்குடி பிரதான கடை வீதியில் அலங்கரிக்கப்பட்ட ராமா் படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கரசேவைக்கு சென்ற உடன்குடியைச் சோ்ந்த ஐந்து போ் கெளரவிக்கப்பட்டனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில், தூத்துக்க்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், உடன்குடி ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா், மாவட்ட இளைஞரணித் தலைவா் விக்னேஷ், பொதுச் செயலா்கள் ஐயப்பன், ஆறுமுகப்பாண்டியன், ஆா்எஸ்எஸ் மாவட்டச் செயலா் பாண்டி, ஒன்றியச் செயலா் குமரேசன், இந்து முன்னணி மாநிலச் செயலா் அரசுராஜா உள்பட திரளானோா் பங்கேற்றனா். ராமா் கோயில் வரலாறு குறித்து சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம் பேசினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT