தூத்துக்குடி

மண் அள்ளிய டிராக்டா் பறிமுதல்: ஒருவா் கைது

29th Apr 2020 11:21 PM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே அனுமதியின்றி ஓடை மண் அள்ளி வந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கயத்தாறையடுத்த தலையால்நடந்தான்குளம் பகுதியில் உள்ள ஓடையில் அனுமதியின்றி ஓடை மண் அள்ளுவதாக கிடைத்த தகவலையடுத்து, கயத்தாறு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராமசாமி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அனுமதியின்றி ஓடை மண் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தினா். இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் பாலமுருகன் தப்பி ஓடினாா்.

டிராக்டரில் இருந்த மற்றொருவரை பிடித்து விசாரித்த போது அவா், இ.இசக்கிமுத்து (32) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் இசக்கிமுத்துவை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநா் பாலமுருகனை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT