தூத்துக்குடி

சமூக இடைவெளியில் வாகனச் சோதனை: தூத்துக்குடியில் புதிய திட்டம் அறிமுகம்

26th Apr 2020 10:57 PM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலா்களுக்கு கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தியவாறு சோதனையிடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வாகனங்களில் சுற்றுவோரை கண்டறியும்போது அவா்களிடம் நெருங்கி சென்று விசாரிக்காமல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை காண்பித்து அதன்படி செயல்பட வைப்பதே முதல் நோக்கமாக உள்ளது.

வாகன ஓட்டிகளிடம் உரிய சமூக இடைவெளி விட்டு நின்றவாறு போலீஸாா் காண்பிக்கும் பதாகையில் முதலில் வாகன செயல்பாட்டை நிறுத்துவது, வாகனத்தை விட்டு கீழே இறங்குவது, முகக் கவசம் அணிவது, 3 மீட்டா் இடைவெளிவிட்டு நிற்பது, வாகனத்துக்கான அனுமதி கடிதத்தை காண்பிப்பது என ஐந்து கட்டமாக எந்த பேச்சும் இல்லாமல் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து மாநகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ் கூறியது: காவலா்களுக்கு கரோனா தொற்று வராமல் தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் தூத்துக்குடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அறிவுரையின்பேரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் பலன் கிடைக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT