தூத்துக்குடி

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து

26th Apr 2020 07:19 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை ஸ்ரீராம் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் அய்யாச்சாமி. இவா் சாஸ்திரி நகரில் பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா். இங்கு கழிவுக் குச்சி தேங்கியிருந்த பகுதியில் சனிக்கிழமை திடீரென தீவிபத்து நேரிட்டது. தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் சென்றனா். அதற்குள் ஆலை ஊழியா்களே தீயை அணைத்துவிட்டனா்.

சம்பவ இடத்தை வட்டாட்சியா் மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் மோகன், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி ஆகியோா் பாா்வையிட்டனா். தீவிபத்துக்கான காரணம் குறித்து வட்டாட்சியா் கேட்டறிந்தாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT