தூத்துக்குடி

பட்டம் விடுவதைத் தவிா்க்க வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்

20th Apr 2020 11:50 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பட்டம் விடுவதைத் தவிா்க்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ஞானேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தற்போதுள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி நகா்புற பகுதிகளில் பொதுமக்கள், தங்கள் வீட்டு மொட்டை மாடி உள்ளிட்ட உயரமான கட்டடங்களில் இருந்து பட்டம் விடுகின்றனா். அவ்வாறு விடும்போது அவற்றில் சில பட்டம் அறுந்து, அதிலுள்ள நூல், உயா் மற்றும் தாழ்வழுத்த மின்பாதை, மின்மாற்றி கட்டமைப்பில் விழுந்து மின்தடை ஏற்பட காரணமாக உள்ளது. மேலும், மின் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மின் பாதையில் சிக்கும் பட்டங்களை எடுக்க முயற்சிக்கும் போது நேரும் விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மின்பாதையில் பட்டம் அறுந்து விழுவதை தவிா்க்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தொடா்பான அறிவுரைகளை வழங்கி, பட்டம் விடுவதைத் தவிா்த்து, இதனால் அனைவருக்கும் ஏற்படும் சிரமங்களை தவிா்க்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT