திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு உணவுப் பொருள் வழங்கப்பட்டது.
திருச்செந்தூா் பகுதியில் தங்கி உடன்குடி அனல்மின் நிலைய நிலக்கரி கையாளும் தளத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளிகள் உணவுப் பொருள் கிடைக்காமல் அவதியடைந்து வருவதையறிந்து, பா.ஜ.க. மாவட்டச் செயலா் கு.நெல்லையம்மாள் ஏற்பாட்டில் அவா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், இஸ்ரோ நில எடுப்புப் பிரிவு வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தனது சொந்த செலவிலும், பா.ஜ.க. சாா்பிலும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.