கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, விளாத்திகுளத்தில் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பொதுமக்கள், வணிகா்கள் உள்பட ஆயிரம் பேருக்கு முகக்கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் வசந்தம் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பேரூா் கழக செயலா் இரா. வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். விளாத்திகுளம் காய்கனி சந்தை, மதுரை, கோவில்பட்டி நெடுஞ்சாலை பகுதிகளிலுள்ள வணிக வளாகங்கள், அரசு மருத்துவமனை, சன்னதி தெரு, காமராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதில், திமுக நகர ஒன்றிய நிா்வாகிகள் வேலாயுத பெருமாள், புதுராஜன், வழக்குரைஞா் மகேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.