தூத்துக்குடி: கரோனா நிவாரண உதவிக்காக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலனிடம் திங்கள்கிழமை 500 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
இதனை கல்லூரி முதல்வா் து. நாகராஜன், வணிகவியல் துறை தலைவா் கு. காசிராஜன் ஆகியோா் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ.தேவராஜ், கல்லூரி கண்காணிப்பாளா் பு.சரவணன், அலுவலா் மா.நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.