திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் திங்கள்கிழமை லேசான மழை பெய்தது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெப்ப சலனத்தின் காரணமாக ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக
வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்று வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் திருச்செந்தூா் பகுதியில் இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பெய்தது. இந்த மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.