கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா், கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித் திரிந்ததாக 17 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய 4 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடன்குடி: உடன்குடி அருகே மாதவன்குறிச்சியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்ததாக அப்பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (23), முத்துலிங்கம் (27), மற்றொறு மணிகண்டன் (26), கிருஷ்ணகுமாா் (21), மாதவன் (26) ஆகியோா் 5 போ் மீது குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.