ஆறுமுகனேரி: சோனகன்விளை பகுதியில் மூன்று கிராம மக்கள் சோ்ந்து தங்கள் பகுதியில் உள்ள நலிவுற்ற குடும்பத்தினருக்கு உணவு பொருள்களை வழங்கி வருகின்றனா்.
குரும்பூா் அருகே உள்ள காணியாளன்புதூா், திருமலையப்பபுரம், சோனகன்விளையை சோ்ந்த பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் திருவள்ளுவா் படிப்பகம் சாா்பில் நலிவுற்ற ஏழைகள், தூய்மைப் பணியாளா்கள், முதியவா்கள் என 350 குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றனா். மேலும் தினமும் ஏழை, முதியோருக்கு உணவும் வழங்கப்படுகிறது.