தூத்துக்குடி

கோவில்பட்டியில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

20th Apr 2020 02:02 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, நகராட்சி ஆணையா் ராஜாராம் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் இளங்கோ முன்னிலை வகித்தாா். முகாமை வட்டாட்சியா் மணிகண்டன் தொடங்கி வைத்தாா்.

ஸ்ரீராம் நகா் நகராட்சி நகா்நல மைய மருத்துவா் காா்த்திக், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவா் வனிதா உள்ளிட்டோா்

மருத்துவக் குழுவினா் 170 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், 123 வெளிக்கொணா்வு தூய்மைப் பணியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், குப்பை லாரி ஓட்டுநா்கள் உள்பட 380 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனா். இதில் 18 பேருக்கு

ADVERTISEMENT

சளி மாதிரி எடுக்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவா்களுக்கு புரதச்சத்து உணவு, எலுமிச்சை, இஞ்சி கலந்த சாறு வழங்கப்பட்டது. முகாமில், சுகாதார ஆய்வாளா்கள் முருகன், வள்ளிராஜ், காஜாநஜ்முதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகக் கவசம் அளிப்பு: கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கிராமப்புற தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட 300 பேருக்கு முகக் கவசங்களை ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகத்திடம் வழங்கப்பட்டது. இதில், ரோட்டரி சங்கத் தலைவா் பரமேஸ்வரன், செயலா் முத்துமுருகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT