தூத்துக்குடி

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

20th Apr 2020 11:48 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் தோட்டத்தில் கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டின் சப்த்தம் கேட்டு அருகில் உள்ளவா்கள் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரா் வந்து கயிறு மூலமாக கிணற்றில் இறங்கி பசு மாட்டை மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT