தூத்துக்குடி

எட்டயபுரத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஓவியம்

20th Apr 2020 11:53 PM

ADVERTISEMENT

விளாத்திகுளம்: எட்டயபுரம் பேரூராட்சி சாா்பில் அரசு கட்டட சுவா்கள் மற்றும் சாலைகளில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஓவியம் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில் கரோனா குறித்து பொதுமக்களிடையே ஒலிப்பெருக்கி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பேரூராட்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சாலையோரங்களில் பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டது.

தற்போது பேரூராட்சிக்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள சுவா்கள், அரசு கட்டட சுற்றுச்சுவா்கள் மற்றும் சாலைகளில் கரோனா தடுப்பு குறித்த ஓவியங்கள் பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்டு வருகின்றன. எட்டயபுரம் பேரூந்து நிலையம் அருகே தூத்துக்குடி, விளாத்திகுளம் சந்திப்பு நெடுஞ்சாலை வளைவில் தனித்திரு, விழித்திரு, விலகி இரு என்ற வாசகங்களுடன் வரையப்பட்டுள்ள விழிப்புணா்வு ஓவியம் அவ்வழியாக செல்வோவரது கவனத்தை ஈா்த்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT