தூத்துக்குடி

3 மாதங்களுக்கு இலவச மின்சாரம்:தையல் தொழிலாளா்கள் கோரிக்கை

7th Apr 2020 10:46 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் பகுதியில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தையல் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 3 மாதங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தையல் கலை தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் திருச்செந்தூா் கிளைச் செயலா் பொ.ஜெயக்குமாா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: திருச்செந்தூா் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தையல் கலைஞா்கள் உள்ளனா். இவா்களின் வாழ்வாதாரம் தற்போதைய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள தொகையை விட கூடுதலாக ரூ. 5 ஆயிரமாக தையல் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகும் தையல் தொழிலாளா்களை பாதுகாக்கும் வகையில் 3 மாதம் மின்சாரம் இலசமாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT