தூத்துக்குடி

தடை உத்தரவு மீறல்: 22 போ் கைது

7th Apr 2020 11:16 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறியதாக 22 பேரை கைது செய்த போலீஸாா் அவா்கள் பயன்படுத்திய 11 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கழுகுமலை, கயத்தாறு, கடம்பூா், நாலாட்டின்புத்தூா், கொப்பம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 22 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய 11 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT