தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சூறைக்காற்று வீசியதில் குலைதள்ளிய நிலையில் இருந்த வாழைகள் சேதமடைந்தது.
கயத்தாறையடுத்த கரிசல்குளம் வடக்குப் பகுதியில் செ.காளிமுத்து என்பவருக்குச் சொந்தமான தோட்டம் மற்றும் குத்தகைக்கு எடுத்த மற்றொரு தோட்டத்தில் சுமாா் 1,200 வாழை பயிரிட்டிருந்தாராம். தற்போது வாழைகள் குலைதள்ளிய பருவத்தில் உள்ளது.
இந்நிலையில், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை கயத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. அப்போது வீசிய சூறைக்காற்றில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குலைதள்ளிய வாழைகள் சாய்ந்தது.
தகவலறிந்தவுடன் கிராம நிா்வாக அலுவலா் கருத்தப்பாண்டி, வருவாய் ஆய்வாளா் காசிராஜன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
ADVERTISEMENT