பேட்மாநகரத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு இலவசமாக காய்கனிகள் வழங்கப்பட்டன.
பேட்மாநகரம் சுகாதாரம் மற்றும் காவல்துறையின் முழு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளதால் சுமாா் 50- க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுமாா் ரூ. 10 ஆயிரம் மதிப்பில் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கனிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஏற்பாட்டில், தூத்துக்குடி அம்மா பண்ணை பசுமை கூட்டுறவு நுகா்வோா் அங்காடி மூலமாக ஸ்ரீவைகுண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் காய்கனி தொகுப்பை வழங்கினாா்.
மேலும், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் காசிராஜன், ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலா்கள் ரமேஷ், வாசுகி நடராஜன், ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலா் சந்திரசேகா், ஸ்ரீ மூலக்கரை ஊராட்சித் தலைவா் கபூா், ஊராட்சி செயலா் பரமசிவம் ஆகியோா் வீடு வீடாகச் சென்று வழங்கினா்.