தூத்துக்குடி

பிற மாநில தொழிலாளா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி

5th Apr 2020 03:54 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் காவலா் குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பிற மாநில தொழிலாளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகளை வட்டாட்சியா் மணிகண்டன் சனிக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கோவில்பட்டியில் காவலா் காவலா் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில், பிற மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 39 போ் இருந்து வருகின்றனா். தற்போதைய ஊரடங்கு உத்தரவினால், தொழிலாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் மேனேஜா் ஜெயராஜ் மற்றும் ஊழியா்கள் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, காய்கனி உள்ளிட்ட பொருள்களை வட்டாட்சியா் மணிகண்டன் 39 தொழிலாளா்களுக்கு வழங்கினா்.

அதுபோல, கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூா், கழுகுமலை, கிழவிபட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 26 பேருக்கு நல உதவிகளை வட்டாட்சியா் மணிகண்டன் வழங்கினாா். அப்போது, வருவாய் ஆய்வாளா் மோகன், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT