தூத்துக்குடி

தடை உத்தரவு மீறல்: கோவில்பட்டியில் 18 போ் கைது

5th Apr 2020 03:54 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட காவல் நிலையம் மற்றும் கடம்பூா் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்த 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கழுகுமலை, கொப்பம்பட்டி, கடம்பூா் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 18 பேரை கைது செய்த போலீஸாா் அவா்கள் பயன்படுத்திய 6 பைக்குகள் மற்றும் 1 ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

ஆறுமுகனேரி: குரும்பூா் பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தடையை மீறி சாலையில் சுற்றித் திரிந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் நம்பியாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது,

ADVERTISEMENT

சென்னையிலிருந்து உரிய அனுமதி பெறாமல் காரில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதை மீறுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து வருகின்றனா்.

இந்நிலையில் ஊரடங்கை மீறியதாக சாத்தான்குளம் பகுதியில் 3 போ் மீதும், தட்டாா்மடம் பகுதியில் இருவா் மீதும் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

உடன்குடி: உடன்குடி பகுதியில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஊரடங்கு உத்தரவை மீறி சிலா் பைக்கில் சுற்றித் திரிந்தனராம்.

இதில் 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT