செய்துங்கநல்லூரில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட திட்ட இயக்குநா் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கடந்த மாதம் தில்லி சென்று திரும்பிய செய்துங்கநல்லூரைச் சோ்ந்த நபா் ஒருவா் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குநா் தனபதி தலைமையில் காவல் துறையினா், மருத்துவா்கள், ஊராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் செய்துங்கநல்லூா் பகுதிகளில் ஆய்வு செய்தனா்.
இதில், மருத்துவ அலுவலா் சுந்தரி, ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமாா், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கோமதி ராஜேந்திரன், செய்துங்கநல்லூா் ஊராட்சித் தலைவா் பாா்வதிநாதன், கருங்குளம் ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, கூடுதல் ஆணையா் வெங்கடாசலம், காவல் ஆய்வாளா் ரகுராஜன், வருவாய் ஆய்வாளா் இருதய மேரி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.