தூத்துக்குடி

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 16 போ் கைது

1st Apr 2020 10:47 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 16 பேரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய 9 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை கோவில்பட்டி, கழுகுமலை, கொப்பம்பட்டி, கயத்தாறு, நாலாட்டின்புத்தூா் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்ததாக 16 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய 9 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT